பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகின. இதில் நிர்வாக ரீதியாக சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதிக அளவில் இருக்கிறது. சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 97.61%, அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 85.71%. இருப்பினும் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மொத்த தேர்ச்சி விகிதம் 84% ஆக மட்டுமே இருந்தது. இந்த ஆண்டு 85.71%. ஆக அதிகரித்துள்ளது. 2015 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை: நிர்வாகம் தேர்ச்சி விகிதம்  ஆதிதிராவிடர் நல வாரியப் பள்ளிகள் 82.17% ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 96.37% கன்டோன்மெண்ட் வாரியப் பள்ளிகள் 97.25% மாநகராட்சிப் பள்ளிகள் 87.90% வனத்துறை கட்டுப்பாட்டுப் பள்ளிகள் 88.74% அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.85% அரசுப் பள்ளிகள் 85.71% அறநிலையத்துறை பள்ளிகள் 90.91% கள்ளர் பள்ளிகள் 90.28% நகராட்சிப் பள்ளிகள் 84.86% ஓரியண்டல் பள்ளி 99.30% மற்ற பள்ளிகள் 100 பகுதி உதவி பள்ளிகள் 95.66% ரயில்வே பள்ளி 87.50% சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 97.61% மாநில வாரியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுயநிதிப் பள்ளிகள் 97.50% சமூக நலப் பள்ளிகள் 90.50% பழங்குடியினர் நலப் பள்ளிகள் 83.48%
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.