இந்திய ராணுவத்தின் கல்விப்பிரிவில் காலியாக உள்ள 635 ஹவில்தார் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கலை மற்றும் அறிவியல் பிரிவில் பட்டம் அல்லது முதுகலை பட்டம்
பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Havildar (Science Stream)
காலியிடங்கள்: 397
தகுதி: ஐடி, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Havildar (Arts Stream)
காலியிடங்கள்: 238
தகுதி: ஆங்கில இலக்கியம், ஹிந்தி இலக்கியம், உருது இலக்கியம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல், உளவியல், கணிதம், சமூகவியல் போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.
வயது வரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். ராணுவத்தினருக்கு 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் ஆசிரியர் கற்பிக்கும் திறன்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.07.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: Headquarter, Recruiting Zone, Fort Saint George, Chennai-600009.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.