WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 1, 2016

மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை:வருகிறது மேலும் 7 புதிய நடமாடும் மையம்.


தமிழகத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, மேலும், ஏழு நடமாடும் மருத்துவ ஆலோசனை வாகனம் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தில், மருத்துவக்கட்டணமாக தலா, ஒரு ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்நிதி நீண்டநாட்களாக பயன்படாமல் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், நடமாடும் மருத்துவ ஆலோசனை வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும், 10 வாகனங்களில், தலா ஒரு உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, மூன்றுமாவட்டங்களுக்கு, ஒரு ஆலோசனை வாகனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், மேலும் ஏழு வாகனங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இரண்டு மாவட்டங்களுக்கு, ஒரு நடமாடும் ஆலோசனை வாகனம் என்ற நிலை மாறும். இதன் மூலம், இன்னும் கூடுதலாக மாணவ, மாணவியருக்கு ஆலோசனை வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.