WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 31, 2016

கட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (மே 31) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு
நிர்ணயித்துள்ள பொருளாதாரத் தகுதி உடையவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் 154 மெட்ரிக். பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 2,459 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 1,950 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ் விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (மே 31) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 4-ஆம் நடைபெறவுள்ள தேர்வுக்கூட்டத்தில் ஆய்வு செய்து அறிவிக்கப்படும். இதில் விண்ணப்பித்துள்ள பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும். கடந்த 2013-14 கல்வி ஆண்டில் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களில் 1,153 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2014-15 ஆம் கல்வி ஆண்டில் 187 பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 2,676 இடங்களில், 1,795 பேர் சேர்க்கப்பட்டனர். 2015-16-ஆம் கல்வி ஆண்டில் 188 பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 2624 இடங்களில் 1,873 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.