2015ம் ஆண்டுக்கான குடிமைப் பணித் (சிவில் சர்வீஸ்) தேர்வுக்கான இறுதி முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இன்று வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி (upsc.gov.in) இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
குடிமைப் பணித் தேர்வுகளான இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) மற்றும் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்டவற்றை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் டினா டாபி முதலிடம் பிடித்தார். அத்தர் அமீர் உல் ஷரி கான் 2ம் இடத்தையும், ஜஸ்மீத் சிங் சந்து 3ம் இடத்தையும் பிடித்தனர்.
தமிழக அளவில் சரண்யா ஹரி முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 7வது இடத்தையும் பிடித்துள்ளார்.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மற்றும் 2016ம் ஆண்டு மார்ச் - மே மாதங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் இந்த இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் (180 பேர்), ஐஎஃப்எஸ் (45 பேர்), ஐபிஎஸ் (150) மற்றும் குரூப் ஏ (728) மற்றும் குரூப் பி (61) என குடிமைப் பணித் தேர்வில் 1078 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.