அரவக்குறிச்சி தொகுதியில் பணம், மது விநியோகம் அதிகளவில் இருந்ததாக எழுந்த புகாரை எடுத்து அத்தொகுதிக்கு தேர்தலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது தலைமைதேர்தல் ஆணையம். தமிழக சட்டசபைக்கு வரும் 16--ம் தேதி தேர்தல் நடக்கிறது. இன்றுடன் பிரசாரம் ஒய்ந்தது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்து வருகிறார். எனினும் ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடந்தது. இது கவலையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கரூரில் அன்புநாதன் என்பவர் வீட்டில் சோதனை நடத்தி ரூ.பல கோடி ரொக்கப்பணத்தை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தி.மு.க.வைச் சேர்ந்த கே.சி. பழனிச்சாமி வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தி ரூ.பல கோடி ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கான ஓட்டுப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டதாக இன்று இரவு திடீர்அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி புகார் அனுப்பினர். இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு , அரவக்குறிச்சி தொகுதியில் அதிகளவில் பணம், மது விநியோகம் நடந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அன்புநாதன், கே.சி. பழனிச்சாமி ஆகியோர் வீடு, அலுவலகங்களில் ரூ. பல கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக விதிகளுக்கு புறம்பாக வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. இத்தொகுதிக்கு வரும் 23-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 25-ம் தேதி நடக்கிறது. இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை கட்சிகள் வரவேற்றும், விமர்சித்தும் வருகின்றன.
Sunday, May 15, 2016
அரவக்குறிச்சி தொகுதி ஓட்டுப்பதிவு ஒத்தி வைப்பு: பணம், மது விநியோகம் அதிகம் என்பதால் அதிரடி.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.