சட்டசபைத் தேர்தலால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள் அசுத்தமாகியுள்ளனவாம். விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் இவற்றை சுத்தம் செய்யும் பணி பெரும் தலைவலியாக மாறியுள்ளதாம். கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் அலங்கோலாமாக காணப்படுகின்றன. காரணம் சட்டசபைத் தேர்தல். சட்டசபைத் தேர்லின்போது அனைத்து அரசுப் பள்ளிகளும் பூத்துகளாக செயல்பட்டன. இதனால் அங்கு தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் நடைபெற்றன. அவை அனைத்தும் இப்போது அகற்றப்பட்டு பள்ளிகளை புதுப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுவர்களில் அசுத்தம்... சுவர்களில் மார்க்கிங் போட்டது, வாக்காளர்களுக்கான போஸ்டர்கள் உள்ளிட்டவை அப்படி அப்படியே உள்ளனவாம். பெரும்பாலான பள்ளிகளில் இன்னும் இவற்றை அகற்ற வேண்டிய வேலை பாக்கி உள்ளதாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.