WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 14, 2016

10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு.

10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஜுன் 20, 21-ம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அறிவியல் பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகை தந்து செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளத் தவறிய பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் ஜுன் 20, 21-ம் தேதிகளில் (திங்கள், செவ்வாய்) நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பான முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அறிவிப்பு ஏதும் அனுப்பப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.