WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 30, 2016

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு இணையத்தில் வெளியீடு.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து மாணவர்கள் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, தேர்ச்சி பெறாத மற்றும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தனர். இதையடுத்து அவர்களின் விடைத்தாள்கள் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு மறுகூட்டல் செய்யும் பணி நடைபெற்றது. இப்பணி முடிவடைந்த நிலையில், இன்று அவர்களின் மறுகூட்டலுக்கு பிந்தைய மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.tndge.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் மறுகூட்டல் மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.