WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 29, 2016

ஜூலை மாதத்தில் வங்கிகள் 11 நாட்கள் செயல்படாது.

ஜூலை மாதத்தில் வங்கிகள் 11 நாட்கள் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம், விடுமுறை நாட்கள் (2-வது, 4-வது சனிக்கிழமை, 5 ஞாயிற்றுக்கிழமை) ஜூலை 6 ரமலான் பண்டிகை விடுமுறை ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலை மாதம் 11 நாட்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியை அதுசார்ந்த பிற வங்கிகளுடன் இணைப்பதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 12, 13, 29 ஆகிய தேதிகளில் சேவை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.  மேலும் ஜூலை மாதம் 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜூலை மாதம் மொத்தம் 20 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும், கம்பெனிகளுக்கும் இடையேயான பணபரிவர்த்தனை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அடுத்த மாதம் பணபரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வது நல்லது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.