WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 14, 2016

மின்சார வாரிய நேரடி பணி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு 19-ஆம் தேதி நடக்கிறது: இணையதளத்தில் 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுக்குரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் மே 22-இல் நடைபெற இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், ஜூன் 19, ஆகஸ்ட் 27, 28-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டன.
 இந்த நிலையில்,  தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 19-இல் நடைபெறவுள்ள தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை (ஹால் டிக்கெட்) www.tangedcodirectrecruitment.in, tangedco.directrecritment.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கூடுதல் விவரங்களுக்கு  044- 2235 8311, 2235 8312 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.