தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பி.வி.ராகவலு, மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி.சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஊடகங்கள் மீதான அவதூறு வழக்குகளை திரும்ப பெறவேண்டும்.
போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் பூபதி கார்த்திகேயன், எழுத்தாளர் துரை குணா இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
ஆந்திராவில் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்ற மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.