அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டை கண்காணிக்க மத்திய அரசு குழுக்கள் களமிறங்கி உள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்ட விதிமுறைகளின்படி தனியார், சுயநிதி
பள்ளிகளில் அறிமுக வகுப்பில் 25 சதவீதம் நலிவடைந்த பிரிவு குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு அறிவித்தது. இதற்கான செலவை தனியார் பள்ளி நிர்வாகத்திடம் அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் உள்ள விதிமுறைகள்படி மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் திருச்சி, விழுப்புரம், திருவாரூர், காஞ்சிபுரம், விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக மத்திய அரசின் குழுக்கள் ஆய்வு செய்தது. இதையடுத்து வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மத்திய அரசின் குழுக்கள் அடுத்த வாரம் வருகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.