WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 7, 2016

4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்.


ஒருங்கிணைந்த, பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., -பி.எட்., நான்கு ஆண்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி, திருக்கானுார், வாழப்பாடியார் நகரில் உள்ள, உஷா லட்சுமணன் கல்வியல் கல்லுாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்கும் வகையில், 1999 - 2000ல் எங்கள் கல்லுாரி துவங்கப்பட்டது. 2004 - 05ல் பி.எட்., படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளையும், புதுச்சேரி பல்கலையின் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து வருகிறோம். இந்நிலையில், ஒருங்கிணைந்த, பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., என்ற புதிய நான்கு ஆண்டு கால படிப்பை துவங்க, அங்கீகாரமும், அனுமதியும் வழங்கக் கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கும், புதுச்சேரி பல்கலைக்கும் விண்ணப்பித்தோம்; எந்த பதிலும் இல்லை. எனவே, ஒருங்கிணைந்த பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., நான்கு ஆண்டு படிப்புக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கும்; நிரந்தர இணைப்பு வழங்கும்படி, புதுச்சேரி பல்கலைக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், மனுதாரரான கல்லுாரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, ஜூன், 8க்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.