WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 2, 2016

கலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், 8ம் தேதி திறக்கப்படுகின்றன. தமிழகத்தில், 83 அரசு கல்லுாரிகள் உட்பட, 700க்கு மேற்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகள்
செயல்படுகின்றன. இவற்றில், 2015 - 16ம் கல்வி ஆண்டிற்கான பருவத்தேர்வுகள், ஏப்ரலில் துவங்கி, மே 6ல் முடிவடைந்தன. இதன்பின், கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளும், கோடை விடுமுறை முடிந்து, வரும் 8ம் தேதி திறக்கப்பட உள்ளன. 'கல்லுாரிகள் திறக்கும்போது, புதிய மாணவர்கள் வந்தால், அவர்களை, 'ராகிங்' செய்யக் கூடாது; பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டும்; இன்முகமாக பழக வேண்டும்' என, மாணவர்களை அறிவுறுத்துமாறு, கல்லுாரிகளுக்கு, உயர்கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.