WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 30, 2016

அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் உபகரணப் பெட்டி.


அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் அறிவியல் திறனை மேம்படுத்த, அறிவியல் உபகரணப் பெட்டிகள் வழங்கப்பட்டன. தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் அறிவியல் திறனை ஊக்குவிக்க, அறிவியல் உபகரணப் பெட்டிகள் வழங்கும்
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இக்கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள, 4,375 பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணப் பெட்டிகள் வழங்கப்படுகின்றன. இப்பெட்டியில் அறிவியல் தொடர்பான உபகரணங்கள், மனித ஜீரண மண்டலம், சுவாச அமைப்பு உள்ளிட்ட, 25 தலைப்புகளில் அறிவியல் உபகரணங்கள் உள்ளன. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 26 நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் உபகரணப் பெட்டியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிளாரன்ஸ், ஆசிரியப் பயிற்றுநர் ஸ்ரீவித்யா ஆகியோர் அந்தந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.