வீட்டில் உள்ள புத்தகங்களை, பூச்சிகளிடம் இருந்து, இயற்கை முறையில் பாதுகாப்பது எப்படி? ஒரு கிலோ வசம்பு, 500 கிராம் கருஞ்சீரகம், 500 கிராம்
ஓமம், 125 கிராம் லவங்கப்பட்டை, 250 கிராம் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும்.
சிவப்பு நிற துணியில், அரைத்த கலவையை, 50 கிராம் அளவில், சிறுசிறு மூட்டைகளாக கட்ட வேண்டும். அந்த மூட்டைகளை, புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள இடத்தில், புத்தகங்களுக்கு இடையில் வைக்க வேண்டும். மூட்டைகளை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
இதை தொடர்ந்து செய்து வந்தால், புத்தகங்களை அரிக்கும் பூச்சிகள் அண்டாது. இதை உபயோகிப்பதால், புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் எந்த உடல்நலக் கோளாறும் ஏற்படாது. ரோஜா முத்தையா நுாலகம்தரமணி, சென்னை.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.