WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 26, 2016

ஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்ததுசான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை.!

ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில், 2002 முதல் 
பல்வேறு கட்டங்களில் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகள் பணி முடித்த பின், தேர்வு நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு பெற்றால், அடிப்படை ஊதியத்தின், இரு மடங்கு அளவுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 10 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை உத்தரவு வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த நடைமுறையில் பலவித விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 'தேர்வு நிலை உத்தரவு வழங்கும் முன், ஆசிரியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், 40 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை வருவதில் இழுபறி ஏற்பட்டது. இதுகுறித்து, ஆசிரியர்கள் தரப்பில், அமைச்சரிடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. அதனால், 'சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை இல்லை' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.