WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 16, 2016

கல்வி கட்டண நிர்ணய குழுதலைவரை நியமிக்க கோரிக்கை.


தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவரை நியமிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமினிடம், மனு
கொடுக்கப்பட்டு உள்ளது. மனுவில் கூறியிருப்பதாவது:தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு தலைவர் பதவி, ஏப்., 1ம் தேதியில் இருந்து காலியாக உள்ளது. எனவே, குழு தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும். தலைவர் நியமிக்கப்படும் வரை, பழைய கட்டணத்தை வசூலிக்க, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்காத, பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள், செலவுகள் அனைத்தையும், பெற்றோரிடம் இருந்து வசூலிப்பதால், அவற்றை சுயநிதி பள்ளிகள் என அழைக்காமல், பெற்றோர் சார்பு பள்ளிகள் என, அழைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.