அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர் சேர்க்கை, பேராசிரியர் மற்றும் பணியாளர் நியமனத்தில், இடஒதுக்கீடு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,
எச்சரித்துள்ளது.
யு.ஜி.சி., சார்பில், அதன் இணை செயலர் கே.பி.சிங், அனைத்து பல்கலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் விவரம்:அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளிலும், அனைத்து பாடப்பிரிவுகளிலும், மாணவர் சேர்க்கை நடத்தும் போது, இடஒதுக்கீடு முறை மற்றும் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும்; விதிமீறல்கள் இருக்கக் கூடாது.
அதேபோல், பேராசிரியர் நியமனம் மற்றும் பணியாளர் நியமனங்களிலும், அதேபோன்ற விதிகளை பின்பற்ற வேண்டும். ஆதிதிராவிடர் பட்டியல் இனத்தவருக்கு, 15 சதவீதம்; பழங்குடியினருக்கு, 7 சதவீதம்; மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீதம் என்ற இடஒதுக்கீடு கொள்கையை, கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.