WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 16, 2016

இங்கிலீஷ் மீடியத்தில் சேர 'சம்திங்' தலைமை ஆசிரியர்களுக்கு 'மெமோ'.


அரசு பள்ளியில், ஆங்கில வழிக்கல்விக்கு பணம் வசூலித்த மூன்று தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, திருப்பத்துார் மாவட்ட கல்வி அலுவலர், 'மெமோ' அனுப்பியுள்ளார். வேலுார் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் ஆங்கில
வழிக்கல்வி பிரிவில் சேர, ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாக, கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பணத்தை திருப்பி ஒப்படைக்குமாறு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் அதை கண்டுக்கொள்ளாமல், பணம் வசூலிப்பது தொடர்ந்தது. காட்பாடி, காங்கேயநல்லுார், நாட்றம்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில், நேற்று முன்தினம், திருப்பத்துார் கல்வி மாவட்ட அதிகாரி அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இதில், பணம் வசூலித்தது உண்மையென தெரியவந்தது. இதுதொடர்பாக, விளக்கம் கேட்டு மூன்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மெமோ வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.