WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 6, 2016

கார்பைடு கல் வைத்த மாம்பழமா? கண்டுபிடிப்பது எப்படி?


கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் உடலுக்கு தீங்கிழைக்கும் என்பதால் நல்ல தரமான பழங்களை பார்த்து வாங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் கூடுதலாகப் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது.
செந்தூரம், பங்கனப்பள்ளி ரகங்களை பொதுமக்கள் மிகவும் விரும்பி வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர். எனினும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும் மாம்பழங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கூறியது: மாங்காய்களை பொதுவாக வைக்கோல் உள்ளிட்ட வெப்பம் தருபவற்றில் வைத்தால் எத்திலீன் சுரப்பு மூலம் 2 நாள்களில் நன்றாக பழுத்து சாப்பிட உகந்ததாக மாறும். நேரசிக்கனம் கருதி சில வியாபாரிகள் கார்பைடு கல் மூலம் மாம்பழங்களைப் பழுக்க வைக்கிறார்கள். கார்பைடு கல்லில் உள்ள அசிட்டிலீன் எனப்படும் வாயுவின் காரணமாக ஒரே நாளில் பழுத்த நிலையை அடையும். ஆனால், இது சாப்பிட உகந்தது அல்ல. வெம்பிப் பழுக்கும் நிலையைப் போன்றது. இதனை சாப்பிட்டால் வயிற்றுவலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும். கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களில் லேசான வெளிர்மஞ்சள் புள்ளிகளைக் காண முடியும். காம்பு பகுதியில் வெட்டிச் சாப்பிட்டு பார்த்தால் புளிப்புச் சுவையும், அதற்கான மணமும் வீசும். சந்தேகம் ஏற்படும் பழங்களை உடனடியாக சாப்பிடாமல் குளிர்சாதன பெட்டிகளில் ஒரு நாள் வைத்து அதன் பின்பு சாப்பிட வேண்டும். அப்படிச் செய்தால் பழத்தின் தன்மை மாற வாய்ப்பு உண்டு. இதுவும் தாற்காலிகமானதே. ஆகவே, தரமான பழங்களை வாங்கிச் சாப்பிட வேண்டும். வியாபாரிகளும் எவ்வித விதிமீறல் செயல்களிலும் ஈடுபடாமல் மாம்பழங்களை விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.