WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 13, 2016

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கடிதம் அனுப்பும் போராட்டம்.


பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, 1.65 லட்சம் கடிதம் அனுப்பி போராட்டம் நடத்த, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், 2012ல், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி,
கணினி அறிவியல் என, பல பாடங்களுக்கு, 16 ஆயிரத்து, 549 பேர் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் பணி நிரந்தரம் கோரி, கடந்த ஆட்சியில் பல கட்ட போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தேர்தலுக்கு பின் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைத்துள்ள நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும், பிரதமர் மோடி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, முதல்வர் ஜெயலலிதா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், செயலர் சபிதா உள்ளிட்ட, 10 பேருக்கு, தலா ஒவ்வொரு கடிதம் என, 1.65 லட்சம் கடிதங்கள் எழுதி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.