WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 16, 2016

தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா ஆற்றிய உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்.

தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா ஆற்றிய உரையில் இடம் பெற்ற
முக்கிய அம்சங்கள்:

* அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் செயல்படும்
* விவசாய கடன் தள்ளுபடி, 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் , டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு, 500 கடைகள் மூட உத்தரவு பாரட்டுக்குரியது.
*விரைவில் லோக் அயுக்தா அமைக்கப்படும்
* 13 ஆயிரம் மெகாவாட் அனல் மின் உற்பத்தி இலக்கு
* கிராமப்புற கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
* நிதி கமிஷன் மூலம் கிராமங்கள் மேம்பாடு
* பொது சுகாதாரம் மேம்படுத்தப்படும்
* கழிவு பொருள் அழிப்பு மேலாண்மை திட்டம்
* ஜல்லிக்கட்டு தடையை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* நகரங்களில் கார்பன் மாசு இல்லாமல் ஆக்க திட்டம்
* சாலை மேம்பாடு, புற வழிச்சாலைகள், பாலங்கள் அமைக்கப்படும்
* சுய உதவிக்குழுக்கள் மூலம்
* கிராமங்கள் தோறும் கழிப்பிடம் கட்ட திட்டம்
* திறந்தவழி கழிப்பிடம் இல்லாமல் ஆக்குவது
*மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தப்படும்
* அம்மா அழைப்பு மையம் மேலும் வலுபடுத்தப்படும்
* நகர்ப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
* உணவு - தானிய உற்றபத்தியில் தன்னிறைவு பெறும்
* பால் வளத்துறை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்
* 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்திறன் அலகு அமைக்கப்படும்.
* வறுமை ஒழிக்க மாவட்டம்தோறும் திட்டம்
*முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 152 ஆக உயர்த்தப்படும்
* சென்னையில் மெட்ரோ ரயில் 2 வது கட்ட பணி துவக்கப்படும் .
* அரசு சேவைகளை மக்கள் எளிதில் பெற வழி வகை
* கறவை பசு, ஆடுகள், இலவச வேட்டி சேலை திட்டம் தொடரும்.
* மீனவர்கள் நலன், இலங்கை தமிழர் நலனில் முழு அக்கறை
* தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ தொடர் நவீன முயற்சிகள்
* தமிழக நலன் காத்திட கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்
* மருத்துவம்- சுகாதாரம் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
* மீனவர்கள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்
* மருத்துவ கல்வி பொது நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்படாது.
* சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டு வர நடவடிக்கை
* 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க ஒப்பந்தங்கள்
* காவிரி பிரச்னையில் முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
* 2 ஆண்டுகளுக்கொரு முறை உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்
* பொன்னேரியை தொழில் முனையமாக்கிட நடவடிக்கை இவ்வாறு பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.