Wednesday, June 8, 2016
தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு கட்டாயம்.
தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வரும், 2017 மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள்; ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியலில் தேர்ச்சி பெறாதவர்கள்; புதிய பாடத்திட்டத்தில், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு இதுவரை பதிவு செய்யாத தனித்தேர்வர்கள், பொதுத்தேர்வுக்கு முன், செய்முறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து தனித்தேர்வர்களும், இன்று முதல், ஜூன் 30ம் தேதி வரை, மாவட்ட கல்வி அலுவலரான டி.இ.ஓ., அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின், தங்களுக்கு ஒதுக்கப்படும் பள்ளிகளுக்கு சென்று, செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். இந்த வகுப்பில், 80 சதவீத நாட்கள் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே, மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.செய்முறை பயிற்சி பெற்ற தேர்வர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு, செய்முறை தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரங்களை அறிந்து, செய்முறை தேர்வை தவறாமல் எழுத வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.