WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 27, 2016

'சிவில் சர்வீஸ்' படிக்க ஆர்வமிருந்தும் போதிய பயிற்சி களம் இல்லை! சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு 'சோதனை'.

நீலகிரி மாணவ, மாணவியர் மத்தியில், சிவில் சர்வீஸ் படிப்பு மீதான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான பயிற்சிக் களத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.நீலகிரியில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்
தேர்வில், மாவட்ட அளவில் முதலிடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்கால திட்டம் டாக் டர், இன்ஜினியர், ஏரோநாடிக்கல் துறை என, உயர் அந்தஸ்து தரும் பணியை குறி வைத்து தான் இருந்து வந்தது.
மாறாத மனநிலை
கான்வென்ட் பள்ளிகளில் படிக் கும் பணக்கார குடும்பத்து பிள்ளைகள் முதற்கொண்டு, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சாதாரண குடும்பத்து பிள்ளைகள் வரை, கல்வியில் சிறந்து விளங்கும் அனைத்து தரப்பு மாணவ, மாணவியரின் மனவோட்டமும் ஒரே மாதிரியாகத் தான் இருந்து வந்தது. ஆனால், டாக்டர், இன்ஜினியர் கனவுடன், மேல்நிலை கல்வியை தொடர்ந்த மாணவ, மாணவியர், இன்று, எந்த நிலையில் உள்ளனர்; அவர்களது கனவு நனவானதா, என்பது, அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.
அவர்கள், தங்களின் இலக்கை எட்டி விட்டனரா? என, அந்தந்த பள்ளிகள் கூட கணக்கெடுத்து வைக்கவில்லை என்பது தான் உண்மை. சிந்தனையில் தெளிவு கடந்த ஓரிரு ஆண்டுகளாக, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியரின் மனவோட்டத்தில் பெரியளவிலான மாறுதல்கள் தென்படுகின்றன. குறிப்பாக, கடந்த மாதம் வெளியான, 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை தக்க வைத்த மாணவ, மாணவியரில் பலர், ஐ.ஏ.எஸ்., உட்பட சிவில் சர்வீஸ் துறை சார்ந்த கனவுடன் மேல்நிலை கல்விக்குள் நுழைந்துள்ளனர்.
'கலெக்டர் ஆக வேண்டும்;
ஐ.பி.எஸ்., ஆக வேண்டும்' என, சிவில் சர்வீஸ் சார்ந்த துறைகளை விருப்பமாக தெரிவித்துள்ளனர். நிச்சயம் சாத்தியமாகும் மாவட்ட 'ரேங்க்' பட்டியலில் இடம் பிடித்த மாணவ, மாணவியரில், 90 சதவீதம் பேர், நடுத்தர வர்க்கத்து பிள்ளைகள் என்ற நிலையில், அவர்களது சிவில் சர்வீஸ் சார்ந்த படிப்பை, அவர்களது பெற்றோரால் நிச்சயம் வழங்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. சாதித்த மாணவ, மாணவியரின் பெற்றோர் சிலர் கூறுகையில், 'கலெக்டர் ஆக வேண்டும்' என, சின்ன வயசில் இருந்தே சொல்லி வளத்தேன்; அதே நினைப்பில் என் பிள்ளையும் இருக்கா' என, தங்களது ஆசையையும் தெரிவித்தனர். ஊக்கம் அவசியம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் நீலகிரியில் இருந்து அதிகம் பேர் தேர்வாகவில்லை என்ற நிலையில், ஊட்டியில் செயல்படும், 'அன்புச்சரம்' இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில், கடந்த, நான்கு ஆண்டுகளில், 200 பேர் பயிற்சி பெற்று, இதுவரை நான்கு பேர் மட்டுமே, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, உயர் பொறுப்புக்கு சென்றுள்ளனர். அந்த வகையில், நீலகிரியில், கூடுதலாக, பல சிவில் சர்வீஸ் பயிற்சி மையங்களை அமைத்து, உரிய பயிற்சியையும் வழங்கும் பட்சத்தில், சிவில் சர்வீஸ் துறையில், மலை மாவட்ட பிள்ளைகளும் சாதிக்க வாய்ப்பு ஏற்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.