Friday, July 1, 2016
10ம் வகுப்பில் பெயிலாகியும் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி : திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் வினோதம்.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயில்கின்றனர். இப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் மனையியல் பாடப் பிரிவில் பயின்ற ஒரு மாணவி, கடந்த மார்ச் மாதம் நடந்த அரசு பொதுத் தேர்வை எழுதியுள்ளார். தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாக, மாற்றுச் சான்றிதழ் தயாரிப்பதற்காக மாணவிகளின் விவரங்களை ஆசிரியர்கள் தயாரித்துள்ளனர். அப்போது, அந்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் தமிழில் 34 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்திருப்பது தெரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பள்ளித் தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகே, கல்வித் துறைக்கு இந்தக் குளறுபடி தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவியின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கும்படி, அரசு தேர்வுத் துறைக்கு முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் கடிதம் எழுதினார். அதன் பேரில், தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, அந்த மாணவியை பள்ளியில் சேர்த்து பிளஸ் 1 படிக்க அனுமதித்த தலைமை ஆசிரியர், திருப்பூரில் உள்ள மற்றொரு மாநகராட்சிப் பள்ளிக்கு மாறுதலாகி சென்றுவிட்டார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி, அவரது பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியரிடம், கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அனைத்து விவரங்களையும், கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்’ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.