WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 9, 2016

ஜூலை 12, 13 தேதிகளில் வங்கிகள் செயல்படாது.


தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார் மயமாக்கல் போன்ற மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், வாராக்கடனாக நிலுவையில் உள்ள 13 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க அதிரடி நடவடிக்கை
எடுக்குமாறு வற்புறுத்தியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்பு நேற்று டில்லியில் தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள், வங்கி நிர்வாகங்கள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் மற்றும் கேரளா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எதுவும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி ஸ்டேட் வங்கி தவிர அதன் துணை வங்கிகள் ஜூலை 12ம் தேதியும் மற்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஜூலை 13 ம் தேதியும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.