பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே நாளை முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  கடந்த 2011 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாண வர்களின் போக்குவரத்துச் செலவு, கால விரயம், தேவையற்ற அலைச் சல்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் ஆகியவை இதனால் தவிர்க்கப்படுகிறது. 2011 முதல் கடந்த 5 ஆண்டு களில் 35 லட்சத்து 53 ஆயிரத்து 353 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 18-ம் தேதி மதிப்பெண் பட்டி யல் வழங்கப்பட உள்ளது. எனவே, ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை பள்ளிகளில் இணை யதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையும், பள்ளிக் கல்வித் துறையும் செய்துள்ளது. ஜூலை 18-ம் தேதியை பதிவு மூப்பு நாளாகக் கொண்டு 3 ஆயிரத்து 893 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படும். இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் பயன்ப டுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழக அரசின் செய் திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.