WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 28, 2016

79,354 ஆசிரியர் நியமனம் : அமைச்சர் தகவல்.


''அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை, 79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
பெஞ்சமின் கூறினார். சட்டசபையில், தி.மு.க., உறுப்பினர் சக்கரபாணியின் கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்: கடந்த, 2011 முதல், அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை நேரடியாகவும், பதவி உயர்வு மூலமாகவும், 79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், தொடக்கப் பள்ளிகளில், தேசிய சராசரியான, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம், 1:25 என, குறைந்துள்ளது. அதேபோல, இடைநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், தேசிய சராசரியை விட, நம் சராசரி சிறப்பாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.