மத்திய அரசின் மானியம் மற்றும் நிதி உதவி திட்ட முறைகேட்டை தடுக்க, வங்கி மூலம், பயனாளிகளுக்கு நேரடியாக நிதி அனுப்பப்படுகிறது. கல்வி திட்டங்கள்
குறித்த உதவித் தொகைகளும், நேரடி மானிய திட்டத்தில் வங்கி மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு முதல், கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து, 'ஆராய்ச்சி படிப்பான பி.எச்டி., உட்பட அனைத்து படிப்புகளுக்கும் உதவித்தொகை பெறும் மாணவர்கள், ஆக., 8ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்' என, அனைத்து கல்லுாரிகள், பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.