தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
முதல்அமைச்சர் ஜெயலலிதா தலைமை யிலான அரசு ஆண்டு தோறும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகள்
தொடங்கப்பட்டு செயல் பட்டு வருகின்றன. இந்த மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஆண்டு தோறும் 100 மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கு இந்திய மருத்துவக் குழுமத் தில் அனுமதி பெறப்பட்டு மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர்க்கப்படு கின்றனர். இந்த ஆண்டு, கோயம்புத்தூர் தொழி லாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர் கள் சேர்க்கையுடன் மருத்துவ படிப்பு தொடங்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு மாணாக்கர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். அதாவது, கடந்த ஐந்தாண்டுகளில் 810 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன.
முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் படி, கரூர் மற்றும் புதுக் கோட்டையில் தலா 150 மருத்துவ மாணவர் கள் சேர்க்கையுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கள் தொடங்கப்பட நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தேவை யான கட்டமைப்பு வசதி களுடன் கூடிய கட்டடங்கள் கட்டவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கவும் தலா 229 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதலும், நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் தொடங்க கட்டடப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதற் கான ஆயத்தப் பணி களை மேற்கொள்ள ஒரு சிறப்பு அலுவலர்முதல்வர் நியமனம் செய்யப்பட் டுள்ளார்.
கோயம்புத்தூர் தொழிலா ளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேவையான பேராசிரி யர்கள், இணைப் பேராசிரி யர்கள், உதவிப் பேராசிரி யர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணி யாளர்கள் மற்றும் மருத்து வம் சாரா பணியாளர்கள் என 808 புதிய பணியிடங் கள் ஏற்படுத்திட முதல் அமைச்சர் ஜெய லலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவதால் அரசுக்கு தொடர் செலவின மாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 39 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவாகும்.
மேலும், புதுக் கோட்டையில் தொடங்கப்பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதற்கட்டமாக பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்கள் என 161 புதிய பணியிடங்களை ஏற்படுத்திட முதல்அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள் ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் காரணமாக, அரசுக்கு தொடர் செலவின மாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 8 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவாகும்.
கோயம்புத்தூர் தொழி லாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டையில் தொடங் கப்பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற் றுக்கு 969 புதிய பணியிடங் கள் ஏற்படுத்திட முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட் டுள்ளார். இப்புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவதன் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றுக்கு, சுமார் 48 கோடியே 55 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.