WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 7, 2016

செய்முறை பயிற்சி இயற்பியலில் அவசியம்.

இயற்பியல் பாடத்தில் செய்முறை பயிற்சி அவசியம், என, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் இந்திய அறிவியல் அகாடமி சார்பில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

கல்லுாரி முதல்வர் அபய்குமார் தலைமை வகித்தார். துறை தலைவர் வாசுகி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் வரவேற்றார். அகாடமி இயக்குனர்கள் சீனிவாசன், சுந்தர் பேசுகையில்,இயற்பியல் விதிகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே ஆராய்ச்சியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வெளிநாடுகளில் சிறப்பு பெறுகின்றனர், என்றனர். ஏழு மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள்,மாணவர்கள் பங்கேற்றனர். ஜூலை 20ம் தேதி வரை கருத்தரங்கு நடக்கிறது.

ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், இயற்பியல் ஆய்வுக்கூட பயிற்சிக்காக மத்திய அரசு ஆண்டுதோறும்100 கோடி ரூபாய் செலவு செய்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் 28 பயிற்சி முகாம் நடக்கிறது, என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.