WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 19, 2016

இலவச பஸ் பாஸ்: முதல்வர் துவக்கி வைப்பு.


பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள, அனைத்து பள்ளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான
சிறப்பு பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில், 480 கோடி ரூபாய் செலவில், 28 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது; நடப்பு ஆண்டில், 504 கோடி ரூபாய் செலவில், 31.11 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்து, ஐந்து பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாசை வழங்கினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.