மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் வி.வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல
மனுவில், 'தமிழக அரசு நடத்தும், அரசு பள்ளிகளில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகள் இல்லை. இதனால், தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்திக்கொண்டு தனியார் பள்ளிகளும், இதுபோன்ற படிப்புகளுக்கு பெரும் தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன.
மேலும், 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படியும், 2006-ம் ஆண்டு சமச்சீர் கல்வி குறித்து டாக்டர் முத்துகுமரன் கமிட்டி பரிந்துரைகளின் படியும், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்கவேண்டும். ஆனால், அரசு அதை செய்யவில்லை. எனவே, இந்த வகுப்புகளை தொடங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,
பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடக்கப்பள்ளிகளில் தொடங்கவேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை முன்வைக்கிறார். ஆனால், 'குழந்தைகளுக்காக தமிழக அரசு அங்கன்வாடிகளை நடத்துகின்றன என்றும் அங்கு தங்களது குழந்தைகளை பெற்றோர் சேர்க்கலாம் என்றும் அதன்பின்னர், அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்புகளில் அந்த குழந்தைகளை சேர்க்கப்படும்' என்றும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படுமா? இல்லையா? என்பதுதான் இந்த வழக்கில் கேள்வியாக உள்ளது.
எங்களை பொருத்தவரை, மேற்கண்ட கேள்விக்கான பதில், தமிழக அரசின் கொள்கை முடிவுகளை சார்ந்தது. எனவே, மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்க விருப்பம் உள்ளதா? அதற்கு சாத்தியம் உள்ளதா? என்பதை அரசுதான் முடிவு செய்யவேண்டும். எனவே, இதுகுறித்து அதிகபட்சம் 4 மாதங்களுக்குள் தகுந்த முடிவினை எடுத்து, அந்த விவரங்களை மனுதாரருக்கு தமிழக அரசு தெரிவிக்கவேண்டும். அதேநேரம், இந்த முடிவை எடுக்கும்போது, டாக்டர் முத்துகுமரன் கமிட்டியின் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.