WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 19, 2016

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரிக்கை.

உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை தர ஊக்க
ஊதியம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் என, ஊதிய உயர்வுகள் வழங்கப்படுகின்றன. உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அரசாணை : இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங் களின் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் ஜனார்த்தனன் கூறியதாவது: தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை, ஓய்வூதியம் பெறுவதற்கான காலமாக கணக்கிட இன்னும் உத்தரவு பிறப்பிக்கவில்லை; ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், பதவி உயர்வு அல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம் வழங்க, பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நேரில் மனு : இதேபோல், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு தேர்வு நிலை தர ஊதியம் வழங்குவது குறித்து, தெளிவுரை வழங்க வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர்கள் வேறு பாடங்களில் உயர்கல்வி முடித்தால், அதற்கும் இரண்டு ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமினை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.