WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 13, 2016

பூமிக்கு அடியில் உறங்கும் பூகம்பம்: இந்தியாவுக்கு ஆபத்தா?


இந்தியாவை பயங்கரமான பூகம்பம் தாக்க இருப்பதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் நகருவதால் பூகம்பம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவை சுற்றி உள்ள இந்தியப்பெருங்கடலுக்கு அடியில் ராட்ச தட்டு உள்ளதாகவும், அது வடக்கு நோக்கி நகருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இமயமலை வளர்ந்ததாகவும், பங்களாதேஷில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்துக்கு இதுவே காரணம் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூகம்பம் ஏற்பட காரணமாக இருக்கும் தட்டு உள்ள பகுதி(வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது) தற்போது பங்களாதேஷ் பகுதியிலும், கிழக்கு இந்திய பகுதியான கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகளின் அடிப்பகுதியில் உள்ள டெக்கானிக் எனப்படும் தட்டுகள் நகர்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக ஆராய்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.  இதன் காரணமாக இந்தியா, பங்களாதேஷ், மியான்மர் போன்ற நாடுகளின் பல பகுதிகளில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இது ரிக்டரில் 8.2 முதல் 9 க்கும் அதிகமான அளவுக்கு பதிவாகும் என்றும், மிகப்பெரிய அழிவை உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.