Saturday, July 23, 2016
பள்ளியில் தூங்கிய தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'.
ஒட்டன்சத்திரம் அருகே மாணவர் இல்லாத பள்ளியில், வகுப்பறையில் துாங்கிய தலைமை ஆசிரியரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம் ஆலயக்கவுண்டன்பட்டியில், 1989 முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இரண்டு மாணவர்கள் மட்டுமே படிப்பதாக வருகை பதிவேட்டில் குறிப்பு உள்ளது. ஆனால், அவர்களும் இப்பள்ளிக்கு வருவது இல்லை. தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு உதவி ஆசிரியர் பணியில் உள்ளனர். உதவி ஆசிரியர் அயற்பணியில் (டெபுடேஷன்) வேறு பள்ளிக்கு சென்று விட்டார். தலைமை ஆசிரியர் ராமராஜ் மட்டுமே உள்ளார். நேற்று முன்தினம், மதியம், 12:00 மணிக்கு பள்ளியில், இரண்டு வகுப்பறைகளில் ஒன்று பூட்டப்பட்டு இருந்தது. மற்றொரு வகுப்பறையில் உள் தாழ்ப்பாள் போட்டு, தலைமை ஆசிரியர் ராமராஜ் துாங்கினார். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர் ராமராஜிடம் விசாரணை நடத்தினர். வகுப்பு நேரத்தில் தலைமை ஆசிரியர் துாங்கியது தெரியவந்ததும், மேலதிகாரிகள் உத்தரவுப்படி, ராமராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.