மாவட்டப் பள்ளிகள் மற்றும் இரவுப் பள்ளிகளை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் தாதர் பகுதியில் உள்ள இரவுப் பள்ளியை சனிக்கிழமை பார்வையிட்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார். ஜாவடேகர் மேலும் கூறியதாவது:

ஏழைகளின் மேம்பாட்டுக்கு கல்வியே முக்கியமானது. பகல்
நேரங்களில் 8 முதல் 10 மணி நேரம் உழைத்துவிட்டு இரவுப் பள்ளிகளுக்கு வரும் ஏழைக் குழந்தைகளைப் பார்த்து வியப்படைகிறேன்.
கல்வி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அதில் யாரும் விட்டுப்போகக் கூடாது. நானும் மாவட்டப் பள்ளியில் படித்து நல்ல நிலைக்கு முன்னேறியவன் என்ற முறையில் அந்த மாணவர்களின் குறைகளை நன்கு அறிவேன்.
தலித்துகள், பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள், பிற்படுத்தபட்ட மக்கள் ஆகியோருக்காக பாடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ஆக, இரவுப் பள்ளிகள் என்னென்ன குறைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வோம்.
தேசத்தின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. விரைவில் ஆசிரியர்களுக்கான பொறுப்புகள் வரையறை செய்யப்பட்டு வெளியிடப்படும். ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துபவர்களாகவும், பொறுப்புடன் செயல்படுபவர்களாகும் இருக்க வேண்டும். ஆசிரியர்களை பயிற்றுவிப்பதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றாலும் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது என்றார் ஜாவடேகர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.