தமிழகத்தில் டி.பார்ம், போஸ்ட் பிஎஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
செவிலியர் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கான போஸ்ட் பி.எஸ்சி., டி.பார்ம், ஏற்கெனவே டி.பார்ம்
முடித்தவர்களுக்கான பி.பார்ம் (lateral entry) ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை (ஜூலை 11 முதல்) பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்திலும், தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்திலும் இந்த 3 படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.
விண்ணப்பங்களை ஜூலை 21-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 22 ஆகும்.
இந்தப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 4-ஆம் வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 2-ஆம் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.