ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தாததை கண்டித்து, வரும், ௮ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு
செய்துள்ளது.
இதுகுறித்து, கூட்டணியின் நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு இடமாறுதல் வழங்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளிலேயே, ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். கற்பித்தல் பணி பாதிக்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு, பள்ளி திறந்த பின்னே, கலந்தாய்வு நடந்தது; கற்பித்தல் பணியும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும், பள்ளி திறந்து ஒரு மாதமாகியும் கலந்தாய்வு நடத்துவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதை கண்டித்து, ௮ம் தேதி, உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.