WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 8, 2016

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக கருப்பசாமி நியமனம்.


தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குனராக கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் பள்ளி இயக்ககம்,
முறைசாரா கல்வி ஆகியவற்றுக்கு, இயக்குனர் பணியிடங்கள், நான்கு மாதங்களாக காலியாக இருந்தன. முறைசாரா கல்வியை, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவனும், மெட்ரிக் இயக்ககத்துக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகனும் கூடுதல் பொறுப்பில் கவனித்தனர். இந்நிலையில், மேல்நிலைப் பள்ளி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி, பணியாளர் நிர்வாகம் இணை இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில், கருப்பசாமி மெட்ரிக் பள்ளி இயக்ககத்துக்கும், பழனிச்சாமி முறைசாரா கல்வி இயக்ககத்துக்கும் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி கல்வித்துறை கையாளும் பிரிவுகள் : தமிழக பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ், பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி, மெட்ரிக் பள்ளி, முறைசாரா கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேர்வுத்துறை இயக்ககம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய துறைகள், ஒவ்வொரு இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அவர்களுக்கு கீழ் இணை இயக்குனர்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் இயங்குகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.