பொது மாறுதல் மற்றும் ஒளிவு, மறைவற்ற கலந்தாய்வு கோரி, தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நடப்பு, 2016 - 17ம் கல்வி ஆண்டில், ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் ஒளிவு, மறைவற்ற கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாநிலம் தழுவிய அளவில், ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், திருப்போரூர் வட்டார, தொடக்க கல்வி ஆசிரியர்கள், திருப்போரூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின், திருப்போரூர் வட்டார நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.