WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 18, 2016

'பேஸ்புக்'கில் நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள் : பயிற்சியின் போது மொபைல் பயன்படுத்த தடை.

ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது, மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி,
நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலமும், வட்டார வள மையங்கள் மூலமும், விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன. உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் மூலமும்; மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனம் மூலமும், சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிகளின் போது, ஆசிரியர்கள் தங்கள் கவனத்தை சிதறவிட்டு மொபைல் போன்களில், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதள பக்கங்களை பார்த்து, நேரத்தை வீணடிப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, பயிற்சி நேரத்தின் போது, ஆசிரியர்கள் மொபைல் போனைபயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வட்டார வள மைய பயிற்சிக்கு வரும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், பயிற்சி நேரத்தில் மொபைல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன பயிற்சி வகுப்புகளுக்கு வரும் ஆசிரியர்களிடம், நுழை வாயிலிலேயே, மொபைல் போன் வாங்கி வைக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.