WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 14, 2016

அரசு, தனியார் ஐடிஐகளில் சேர ஆக.16-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஐடிஐகளில் சேர வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் தொழில் பயிற்சி பெற காலியாக உள்ள
இடங்களுக்கு 29.07.2016 முதல் மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகப் பெறப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மகளிருக்கென இயங்கி வரும் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 தேர்ச்சி, தோல்வி மற்றும் பட்டப் படிப்பு முடித்த மகளிர்களுக்கு கணினி இயக்குபவர் மற்றும் திட்ட உதவியாளர், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆபரேட்டர் ஆகிய இரு தொழிற்பிரிவுகளில் ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மகளிருக்கு வயது வரம்பு கிடையாது.  பயிற்சி காலத்தில் மாதம் ரூ.500 உதவித்தொகை, விலையில்லா மடிக் கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும். ஓராண்டுப் பயிற்சி நிறைவு செய்த பிறகு மத்திய அரசால் தேர்வு நடத்தி தேசிய தொழில்சான்று வழங்கப்படும். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், மின்சாரப் பணியாளர், கம்மியர் மோட்டார் வண்டி, குழாய் பொருத்துநர் போன்ற தொழில் பிரிவுகளிலும், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கம்பியாள் தொழில் பிரிவிலும், தொழில் பயிற்சி அளிக்க காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொழில் பயிற்சி பெற www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பயிற்சி அலுவலர், அரசு தொழில் பயிற்சி நிலையம்(மகளிர்) பரமத்தி சாலை, தட்டாங்குட்டை, நாமக்கல் என்ற முகவரிக்கு நேரில் வந்தோ அல்லது 04286-267976 என்ற தொலைபேசி எண் அல்லது 9443328279 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.