WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 13, 2016

பெயரின் தலைப்பு எழுத்தை தமிழில்தான் எழுத வேண்டும்: ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்.

ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை (இனிஷியல்) தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற் றறிக்கையில் கூறியிருப்பதாவது:  ‘தொடக்கக் கல்வி இயக்ககத் தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துகளை தமிழில் எழுதுவதில்லை. ஆங்கிலத் திலேயே எழுதுகின்றனர். இத்தகைய செயல்பாடு அரசு உத்தரவை மீறும் செயல்’ என்று புகார் வரப்பெற்றுள்ளது. எனவே, வருங்காலத்தில் இது போன்ற புகார்கள் வராத வகையில், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணி யாளர்கள் அனைவரும் அரசு உத்தரவின்படி, தங்கள் பெயரின் தலைப்பெழுத்துகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று உதவி தொடக்கக் கல்வி அதி காரிகள் மூலமாக அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.