WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 14, 2016

குரூப் - 1 நேர்முக தேர்வு பட்டியல் வெளியீடு.

குரூப் - 1 பதவியில், துணை கலெக்டர் உள்ளிட்ட, 79 காலியிடங்களை நிரப்புவதற்கான, நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஜூன், 5, 6 மற்றும், 7ம் தேதிகளில் நடந்தது; 3,407 பேர் பங்கேற்றனர். இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தேர்வர்களின் மதிப்பெண், 'கட் - ஆப்' தரவரிசை போன்ற விவரங்கள், பதிவெண்களுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு, வரும், 19ம் தேதி முதல் நடக்க உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.