அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்,
தொலை நிலையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., முடித்த பின், பயிற்சி மேற்கொள்ள விரும்பினால், தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தி, பயிற்சி
மேற்கொள்ளலாம். அதேநேரம், ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளியில் பயிற்சி பெறலாம்.
'இந்த பயிற்சிக் காலம், பணிக் காலமாக எடுத்துக் கொள்ளப்படாது; எனவே, பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.