தேர்வு கட்டண பாக்கியால், ஒன்பது தனியார் இன்ஜி., கல்லுாரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 571 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, ஆக., 4ம் தேதி; எம்.இ., -
எம்.டெக்., படிப்புகளுக்கு, 6ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், தேர்வு கட்டணம் செலுத்தாத, சில கல்லுாரிகளின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டன; அந்த கல்லுாரிகளுக்கு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில், ஒன்பது கல்லுாரிகள், கட்டணம் செலுத்த அவகாசம் கேட்டுள்ளன. 'பணம் கட்டிய கல்லுாரிகளின் முடிவுகள், திங்கட் கிழமை வெளியாகும்' என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.