WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 1, 2016

தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்.


துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற, துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் துாய்மையை பேணும்
வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சோப்பு வழங்குதல், கழிப்பறைகள் கட்டி பராமரித்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசின் நிதி உதவி வழங்கப் படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான, 500 பள்ளிகளை தேர்வு செய்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசும், 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' என்ற விருதையும், மத்திய அரசு வழங்குகிறது. இந்த ஆண்டு துாய்மை பள்ளி விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூலை, 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஆக., 12 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை, மத்திய அரசின் http://mhrd.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.